நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய 5 தாலுகாவில் பணிபுரியும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராமப்புற செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் என 10 ஆயிரத்து 900 பேர் முன்கள பணியாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடும் பணியினை மத்தியில் பிரதமரும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நாளை தொடங்கிவைக்க உள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 10 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை கரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் 3 முகாம்களிலும் நூறு, நூறு பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதையும் படிங்க:
முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி, ஆட்சியர் கதிரவன் ஆய்வு