கரோனா இரண்டாம் அலையின் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் எவ்வித அச்சமுமின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசமின்றியும் பொதுமக்கள் பூக்கள் வாங்க அதிகளவில் ஒன்றுகூடி வந்துள்ளனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஷ்வரி பூக்கடை சத்திரத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறுகையில், 'தற்போது, கரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இங்கு அரசு விதித்த விதிகளை மீறி அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இங்கு 50க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் விதிகளை மீறி செயல்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை சமூக இடைவெளி மற்றும் முகக் கவசமின்றி அனுமதித்தால் அடுத்தகட்டமாக கடைக்குச் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பூக்கடை சத்திரத்தில், நடைபாதைகளை ஆக்கிரமித்த கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, கரோனா நோய்த்தொற்று விதி மீறல்கள் காரணமாக முகக்கவசம் அணியாத 9 ஆயிரம் நபர்கள், மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது' என பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்