செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மஞ்சள், வேப்பிலை பயன்படுத்தி தாங்களே இயற்கையான கிருமிநாசினி மருந்தினை உருவாக்கியுள்ளனர்.
இந்த கிருமிநாசினி மருந்தினை கிராமங்களிலுள்ள அனைத்து தெருக்களிலும் நான்கு சக்கர வாகனத்தின் உதவியுடன் தெளித்தனர்.
இதற்காக அவர்கள் 500 கிலோ விராலி மஞ்சள் மற்றும் வேப்பிலைகளை அறைத்து ஐந்தாயிரம் லிட்டர் தண்ணீர் சேர்த்து தயாரித்துள்ளனர். இதனை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கிய சாலைகளில் தெளித்தனர்.
இதையும் படிங்க: 'தேனியில் புது தோணி' - கரோனாவை விரட்ட கற்றாழை ஹேண்ட் வாஷ்