தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது, அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கனமழை முதல் மிதமான மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் இன்று (டிச. 06) காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 2.28 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 1.34 செ.மீ., உத்திரமேரூரில் 1 செ.மீ., வாலாஜாபாத்தில் 0.3 செ.மீ., குன்றத்தூரில் 2.02 செ.மீ. என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 6.94 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையினால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.