ETV Bharat / state

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் கைது! - சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில்

காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் குருக்கள் ராஜப்பாவை, காவல் துறையினர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் கைது..!
author img

By

Published : Jun 23, 2019, 6:41 PM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாகச் சிலை திருட்டு தடுப்புக் காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து பலரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆலயத்தில் பணிபுரிந்த முன்னாள் குருக்கள் ராஜப்பா தேடப்பட்டுவந்தார்.

இவர் வெளிநாட்டில் இருப்பதாகக் காவல் துறையினருக்குத் தெரிய வரவும், இந்தியாவுக்குள் வந்தால் இவரைக் கைது செய்யும்படி குடியுரிமை அலுவலர்களுக்கு, காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சாமிக்கு சிலை செய்யும் தங்கத்தில் முறைகேடு செய்த குருக்கள் ராஜப்பாவை கைது செய்யும் காட்சி

இதனைத் தொடர்ந்து கனடாவிலிருந்து மும்பைக்குத் திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்புக் காவல் துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் முன்னிறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ராஜப்பா குருக்களை எதிர்வரும் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தஞ்சாவூர் ஜுன் 23

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கத்தில் முறையீடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இவ்வாலய முன்னாள் குருக்கள்   மும்பை விமான நிலையத்தில் கைது. கைது செய்யப்பட்ட ராஜப்பா குருக்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைப்பு .

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து பலரை கைது செய்துள்ள நிலையில் ,இவ்வாலயத்தில் பணிபுரிந்த முன்னாள் குருக்கள் ராஜப்பா குருக்கள்  தேடப்பட்டு வந்தார் .இவர் வெளிநாட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு தெரிய வரவும், இந்தியாவுக்குள் வந்தால் இவரை கைது செய்யும்படி இமிகிரேஷன் அலுவலர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  கனடாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர்  தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .இதனைத் தொடர்ந்து ராஜப்பா குருக்களை எதிர்வரும் ஐந்தாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.