ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

author img

By

Published : May 26, 2021, 7:28 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலை. இங்கு தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன், டேங்கர் லாரிகள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 145 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக 195 மெட்ரிக் டன்னாக அளவு உயர்த்தப்பட்டது.

ஆக்சிஜன் தொழிற்சாலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே.26) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தொழிற்சாலை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.