ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு - புதிய பட்டுச்சேலை அறிமுகம் - Chess Board in Kanchi Silk

செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சி தனியார் பட்டுச்சேலை நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ள பட்டுச்சேலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிமுகப்படுத்தினார்.

காஞ்சி பட்டில் செஸ் போர்டு-செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பட்டு சேலை

author img

By

Published : Aug 2, 2022, 9:16 AM IST

காஞ்சிபுரம்: இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் ஜூலை 28-ந் தேதி முதல் தொடங்கி இம்மாதம் ஆகஸ்டு 10ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.

பட்டு நகரம் என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் பிரதான தொழிலான பட்டுச்சேலை உற்பத்தி தொழில் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல தனியார் பட்டுச்சேலை நிறுவனம் முடிவெடுத்து ஒரு புது முயற்சியை மேற்கொண்டது.

அதன்படி சுமார் 35 நாட்களாக நெசவாளர் மூலம் செஸ் போர்ட்டில் இருப்பது போலவே கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டங்கள் கொண்டும், இரு புறமும் பார்டர் அமைத்து பிரத்யேக படடுச்சேலையை தயாரித்துள்ளது. இந்த பட்டுச் சேலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிமுகப்படுத்தினார்.

காஞ்சி பட்டில் செஸ் போர்டு-செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பட்டு சேலை

இது குறித்து பிரபல தனியார் பட்டுச்சேலை நிறுவனத்தை சேர்ந்த வசந்த் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்தியாவிலே முதன்முறையாக தமிழ்நாட்டில் 44வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெறுகிறது.

செஸ் விளையாட்டு போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போர்ட்டில் இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்கள் இருக்குமாறு வடிவமைத்து பட்டுச்சேலை நெய்யப்பட்டதாகவும், நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் நிறுவனம் மூலம் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேலையை தயாரித்துள்ளோம்" என பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நிச்சயமாக ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறுவோம்..!' - கிராண்ட் மாஸ்டர் அதிபன் பாஸ்கரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.