செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள இரும்புலிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (58). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் நெல், கரும்பு பயிரிடுவது வழக்கம். இந்நிலையில், நாகராஜ் தனக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு நாள்களில் வெட்டி அதை படாளம் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது. இதனிடையே, கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். அதற்குள் 1.5 ஏக்கர் அளவிற்கு கரும்புகள் தீயில் கருகி நாசமாகின. மேலும் அருகிலுள்ள 10 ஏக்கர் நெல் வயலில் தீ பரவும் முன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்துவந்து தீயை கட்டுப்படுத்தி முற்றிலும் அணைத்தனர். இது குறித்து படாளம் சர்க்கரை ஆலையில் நாகராஜ் புகார் அளித்தார். அப்போது, சர்க்கரை ஆலை அலுவலர்கள் நாங்கள் கொடுக்கும் தொகையை மட்டும் நீ வாங்கிக் கொள் கரும்பை உடனே வெட்டி அனுப்பும்படி கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நாகராஜ் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும் காவல் துறை, வருவாய்த் துறை ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை நேரில் வந்து யாரும் பார்க்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: