செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துறை கிராமத்தில் இயங்கிவரும் கிராமிய வளர்ச்சி சங்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெண் சாதனை நாயகர்கள் அன்னை தெரசா, கல்பனா சாவ்லா ஆகியோர் படத்தை கையில் ஏந்தியும், பெண்கள் நாட்டின் கண்கள், சமுதாயத்தில் பெண்களுக்கு முழு உரிமைகள் தர வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை கடத்த முயற்சி - ஆட்டோ ஓட்டுநருக்கு விருந்து வைத்த பொதுமக்கள்!