செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளியில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோயம்பேட்டிலிருந்து 30 பயணிகளுடன் திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது, முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல பேருந்து முயற்சித்தபோது தடுப்பு சுவர்மீது மோதி சாலையின் குறுக்கே தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த பயணிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்துக்குள்ளான பயணிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனை வணிக அதிபர் கொலை வழக்கு: தனியார் வங்கி அலுவலர்கள் கைது!