ETV Bharat / state

மே 5ஆம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் மாநாடு - விக்கிரமராஜா - kanchipuram district news

காஞ்சிபுரம் : 10 ஆயிரம் வணிகர்கள் கலந்துகொள்ளும் வணிகர் சங்க பேரமைப்பின் மாநாடு சென்னையில் மே 5ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

chamber-of-commerce-consultative-meeting

author img

By

Published : Apr 8, 2021, 9:29 PM IST

காஞ்சிபுரம் பெரியார் நினைவுத் தூண் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் காஞ்சி மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று சிறப்புரையாற்றிப் பேசினார். பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையினை அவர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'வருகின்ற மே 5ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறவுள்ள வணிகர் சங்கப் பேரமைப்பின் மாநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

வணிகர் சங்க நிர்வாகப் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட் பகுதியில் சிறு, குறு வியாபாரிகள் அப்புறப்படுத்தப்படும் அரசு அலுவலர்களின் செயல் மோசமானது. வணிகர் சங்க பேரவை நிர்வாகப் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்கவில்லையெனில் அதனை எதிர்த்துப் போராட்ட தேதி அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி
தற்போது கோடைக்காலம் என்பதால் காய்கறிகள், சாலையோரக் கடைகள் காய்ந்து போகும் சூழல் உள்ளதால், சுழற்சி முறையில் 50 விழுக்காடு வியாபாரம் செய்ய ஒத்துழைப்புத்தர தயாராக இருக்கிறோம்.
வருகிற 11ஆம் தேதி சென்னையில் வணிகர்களை அழைத்துக் கொண்டு அரசுத்துறை அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களோடு அனைத்து வணிகர்களும் தடுப்பூசி போடத் தயாராக உள்ளோம்.
மேலும் அனைத்து வணிகர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பிடிக்கப்பட்ட பணம் முழுவதும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் திருப்பி அளிக்க வேண்டும் என வணிகர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்ளபடுகிறது’ என தெரிவித்தார். இதையும் படிங்க:

துபாய்க்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.