ETV Bharat / state

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: காஞ்சிபுரத்தில் 3 பேர் கைது - CBCID investigation into 3 persons in Kanchipuram

காஞ்சிபுரம்: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன், பெண் உள்பட 3 பேர் கைது

author img

By

Published : Feb 4, 2020, 8:35 AM IST

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சுமார் 16 நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜகோபால் மகன் திருஞானசம்பந்தம் இடைத்தரகராகச் செயல்பட்டுவந்தார் என சிபிசிஐடிக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தென்கரை பகுதியில் வசிக்கும் ராஜகோபால் வீட்டுக்குச் சென்றனர். விசாரணையில் அவரது மகன் திருஞானசம்பந்தம் குரூப் 2ஏ தேர்வில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஊராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலைசெய்த வடிவு என்ற பெண்ணையும், வேளிங்கப்பட்டரை பகுதியில் ஆனந்தன் என்பவரைவும் பிடித்து விசாரணை செய்தனர். குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் இவர்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் உள்பட 3 பேர் கைது

அதன்பேரில் இவர்கள் மூன்று பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து சென்னை சிபிசிஐடி அலுவலத்திற்கு அழைத்தச் சென்றனர். தமிழ்நாட்டிலேயே டி.என்.பி.எஸ்.சி. படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடம் காஞ்சிபுரம் மாவட்டம். அதனால் இதுபோன்ற முறைகேட்டில் காஞ்சிபுரம் பகுதியில் பலர் பிடிபடுவார்கள் என விவரம் அறிந்த காவல் துறையினர் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, குரூப் 2ஏ முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். தற்போது, இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: பத்திரப்பதிவுத்துறையில் 2 பேர் இடைநீக்கம்

Intro:குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரின் மகன் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர்களைப்பிடித்து சிபிசிஐடி விசாரணை

Body:குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சுமார் 16 பேர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையில் குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளரின் மகன் திருஞானசம்பந்தம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ முறைகேட்டில் இடைத் தரகராக செயல்பட்டு வந்தார்
என சிபிசிஐடிக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதிரடியாக சிபிசிஐடி பிரிவினர் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தென்கரை பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் என்பவர் வீட்டுக்கு சென்றனர். தலைமைச்செயலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் சம்பந்தம் என்பவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர் . அதில் அவர் குரூப்-2 ஏ தேர்வில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது . அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஊராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்த வடிவு என்ற பெண்ணையும், வேளிங்கப்பட்டரை பகுதியில் ஆனந்தன் என்பவரைவும் பிடித்து விசாரணை செய்தனர். குரூப் 2 தேர்வு முறைகேட்டில் இவர்கள் சம்பந்தப்பட்ட இருப்பதும் இவர்களுக்கு பின்னால் தொடர்ச்சியாக பலர் உள்ளதும் தெரியவந்ததின்பெயரில் இவர்கள் மூன்று பேரையும் சிபிசிஐடி துறையினர் கைது செய்து சென்னை சிபிசிஐடி அலுவலத்திற்கு கொண்டுசென்றனர். Conclusion:தமிழ்நாட்டிலேயே டிஎன்பிஎஸ்சி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடம் காஞ்சிபுரம் மாவட்டம். அதனால் இதுபோன்ற முறைகேட்டில் காஞ்சிபுரம் பகுதியில் பலர் பிடிபடுவார்கள் என விவரம் அறிந்த காவல்துறையினர் கூறுகிறார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.