ETV Bharat / state

தனியார் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் - car factory worker strike

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

car spare parts workers strike in Sriperumbudur
author img

By

Published : Sep 24, 2019, 11:17 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிறைந்து காணப்படும் ஸ்ரீபெரும்புதூரில் போந்தூர் அருகே இயங்கி வரும் கார் உதிரி பாக தொழிற்சாலை 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இருந்தபோதும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆலை நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்துள்ளது.

ஊழியர்களின் முற்றுகப்போராட்டம்

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'சித்தூர் ஆறு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் தனியார் ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரி தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் தமிழகமெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆட்டோமொபைல் தொழிற்சாலை நிறைந்து காணப்படும் ஸ்ரீபெரும்புதூரில் போந்தூர் அருகே இயங்கும் கார் உதிரி பாக தொழிற்சாலை பத்தாண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது வரை பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் ஊதிய உயர்வும் செய்யாமல் தொழிற்சாலை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதை பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித பயனும் அளிக்காத காரணத்தால் Conclusion:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிலாளர் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் என 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.