இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கரோனா காலம் என்பதால் தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து முன்னணியினர் சிலைகளை வைத்து நிச்சயம் வழிபாடு செய்வோம் என தெரிவித்துள்ள நிலையில், காவல் துறையினர் விநாயகர் சிலைகள் செய்யும் பட்டறைகளுக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் காலை முதல் பொது வீடுகளில் வழிபாடு செய்ய மக்கள் விநாயகர் வாங்கி சென்ற நிலையில், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் உள்ள நகர பாஜக அலுவலகத்தில் அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவுபடி 3அடி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்.
இதேபோல் இந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் வாசலில் ஒரு அடி விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.
கடந்த மூன்று நாள்களாக காவல்துறை விநாயகர் சிலை வெளியில் வராத அளவிற்கு காவல் பணிகளை மேற்கொண்டும், சிலை வைத்து வழிபாடு செய்தது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகே சிறுவனை விநாயகர் வேடமிட்டு ஊர்வலமாக மேற்கு மாவட்ட பாஜக தலைவர் குமார் தலைமையில் எட்டு பேர் அழைத்து சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆயுஷ் அமைச்சக செயலரின் இந்தி வெறியை தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும்'