காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சிக்கி எவரும் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.
இது குறித்து செய்தியாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் கூறியதாவது, "தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிக்கி உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என 1,896 வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.
இந்த ஏலம் விற்பனை மூலமாகப் பெறப்பட்ட ஒரு கோடி 11 லட்சத்து 29 ஆயிரத்து 624 ரூபாய் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 563 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மேல் முறையீடு