ETV Bharat / state

வெண்பட்டு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரம் : அத்திவரதர் வைபவத்தின் 41ஆவது நாளான இன்று ரோஸ், ஊதா, வெண்பட்டு நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரம்
author img

By

Published : Aug 10, 2019, 12:47 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் முடிய சில நாட்களே உள்ளதால், அதிகளவான பக்தர்கள் தரிசனத்துக்காக காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் சராசரியாக 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று அத்திவரதர் ரோஸ், ஊதா, வெண்பட்டு நிற பட்டாடை அணிந்து பல வண்ண மலர்கள் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதர் வைபவம் முடிய சில நாட்களே உள்ள நிலையில், வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

வெண்பட்டு நிற பட்டாடை அணிந்த அத்திவரதர்!

Intro:
.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்தி வரதர் வைபவத்தில் அத்திவரதரை தரிசிக்க இன்னும் ஆறு நாட்களே உல்லதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் அதிகாலை முதலே அத்தி வரதரை தரிசிக்க குவியும் பக்தர்கள்

Body:
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்தி வரதர் வைபவம் தொடங்கி 41 ஆவது நாளான இன்று ரோஸ் ஊதா வெண்பட்டு நிறம் பட்டாடை அணிந்து பல வண்ண மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்தி வரதர்.

அத்தி வரதர் வைபவம் முடிய சில நாட்களே உள்ளதால் அதிக அளவு பக்தர்கள் அத்திவரதர் தரிசிக்க குவிந்துள்ளனர். நள்ளிரவு 12 மணி முதலில் காத்திருந்து அத்தி வரதர் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சராசரியாக 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் காலங்களில் இதை விட அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் அத்தி வரதரை மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அத்தி வரதரை 77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கடந்த 90 நாட்களில் தரிசனம் செய்துள்ளனர்.

இன்று முதல் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின் பேரில் 1200 தூப்புரவு பணியாளர்கள் உடன் கூடுதலாக 500 துப்புரவு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

இன்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே தென்பட்டால் பக்தர்களை தேக்கி வைப்பதற்கு கூடுதலாக 2 தற்காலிக தங்குமிடம் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 16 அன்று பக்தர்களுக்கு தரிசனம் கடைசி நாள் என்பதாலும் இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது

இன்று அதிகாலை சுகாதார பணிகளுக்காக வந்த மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளே அனுமதிக்காமல் அவர் கொண்டுவந்த நுழைவுச் சீட்டை கிழித்து காவலர்கள் எதிர்த்ததால் 45 மருத்துவ முகாமில் இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நுழைவாயில் காவலர்களை கண்டித்து வெளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion:இன்றைய விரும்பலை நாள் என்பதாலும் தொடர் விடுமுறை காரணமாக வும் அதிக அளவில் பக்தர்கள் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் வருவார்கள் கூட்ட நெரிசலில் அவர்கள் மயங்கி விழுந் தாலோ அல்லது வேறு காரணத்தால் மருத்துவ உதவி தேவைபட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய மருத்துவ மையங்களில் எந்த ஒரு மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.