ETV Bharat / state

நாளையுடன் விடைபெறுகிறார் அத்திவரதர்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

author img

By

Published : Aug 15, 2019, 3:01 PM IST

அத்திவரதர் தரிசனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலின் அத்திவரதர் சாமி தரிசனம் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதரைக் காண பொதுமக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்பட பல முக்கியத் தலைவர்களும் அத்திவரதரை தரிசித்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரலங்களும் சாமி தரிசனம் செய்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. 45ஆம் நாளான நேற்றுவரை மட்டும் சுமார் 95 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 46ஆம் நாளான இன்று அத்திவரதர் புஷ்பாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி நிறைவுபெறுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், பக்தர்களின் கூட்டம் இன்று 1 கோடியைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயில் ஆகமவிதிப்படி, நாளை அத்திவரதரை குளத்திற்குள் கொண்டுசெல்லும் வழிபாடு நடக்கும். இதையடுத்து இனி 40 ஆண்டுகள் கழித்துதான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

Intro:Body:

Athi varathar last day news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.