ETV Bharat / state

ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதனைப் படைத்த பட்டதாரி இளைஞர்!

காஞ்சிபுரம் : குன்றத்தூர் அருகே பட்டதாரி இளைஞர் நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் என ஒரு மாதத்தில் 2,369 கி.மீ ஓடி இந்திய ரன்னர் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

At the national level, graduate youth race record!

author img

By

Published : Sep 8, 2020, 8:54 PM IST

காஞ்சிபுரம் மாவாட்டம் குன்றத்தூர் அடுத்துள்ள நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் கண்ணன்(22) என்பவர், இளங்கலை இலக்கியத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சிறுவயது முதலே ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் ஏழு ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 170 மாரத்தான், மினி மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அதில் 153 போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்திய ரன்னர் போட்டியில் பங்கேற்று கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும், அதிகாலை 3 மணிக்கு துவங்கி 8 மணி வரையும், மாலையில் 3.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 கி.மீ தூரம் என ஓடி, ஒரே மாதத்தில் 2369 கி.மீ தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்த பெண்மணி ஒரு மாதத்தில் ஓடிய தூரம் 192 கி.மீ. அதனோடு தினேஷ் கண்ணன் ஓடிய தூரத்தைக் கணக்கிட்டால் 10 மடங்கு அதிக தூரத்தை கடந்துள்ளது தெரியவரும்.

இவர் ஏற்கனவே பங்கெற்ற 2018ஆம் ஆண்டு இந்திய ரன்னர் போட்டியில் 774 கி.மீ தூரம் கடந்து முதலிடத்தையும், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,472 கி.மீ தூரம் கடந்து முதலிடமும், தற்போது 2,369 கி.மீ ஓடி மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்து ஹாட்ரிக் அடித்துள்ளார். இவரின் சாதனையைப் பாராட்டி இந்திய ரன்னர் அமைப்பு பதக்கத்துடன், பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளது.

ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் சாதனைப் படைத்த பட்டதாரி இளைஞர்

இது குறித்து ஓட்டப்பந்தைய வீரர் தினேஷ் கண்ணன் கூறுகையில், தனக்கு அரசு உதவி செய்து, பயிற்சியாளர் மூலம் பயிற்சியளித்தால் நான் நிச்சயம் நாட்டிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன். எனக்கு இந்திய ராணுவத்தில் பணி செய்திட வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:போட்டி நடுவரை தாக்கியதால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.