ETV Bharat / state

தண்ணீர் குட்டையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! - Dedbody founded in Arpakkam pond

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த ஆறப்பாக்கம் அருகே தண்ணீர் குட்டையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்த மாகறல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arpakkam
arpakkam
author img

By

Published : Mar 2, 2021, 6:40 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆறப்பாக்கம் அருகே ஆறப்பாக்கம்- சுருட்டல் செல்லும் சாலையிலுள்ள தண்ணீர் குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக மாகறல் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில், இறந்த நபர் ஆறப்பாக்கம் ஆழ்வார்பேட்டை தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (38) என்பதும், இவர் அப்பகுதியிலுள்ள தனியார் தோட்டப் பண்ணையில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர் என்பதும், சுப்பிரமணி மது பழக்கம் அதிகம் உள்ள நபர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுப்பிரமணி மது போதையில் குட்டை அருகே சென்று தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வன்னியர் உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.