ETV Bharat / state

அத்திவரதருக்கு 10 அடி உயர உருவபொம்மை - அர்ஜுன் சம்பத் - athi varadar

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை நினைவுகூரும் வகையில் அத்திவரதரின் 10 அடி உயர உருவபொம்மை நிறுவப்படும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் சம்பத், அத்திவரதர், arjun sampath
அத்திவரதருக்கு உருவபொம்மை
author img

By

Published : Jul 17, 2021, 6:19 PM IST

காஞ்சிபுரம்: உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் என்றழைக்கப்படும், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று (ஜூலை 17) சாமி தரிசனம்செய்தார்.

பின்னர் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்திற்குச் சென்று வணங்கிய அவர், அத்திவரதர் வைபவத்தின்போது அத்திவரதர் எழுந்தருளிய வசந்த மண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத், "40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் 2019ஆம் ஆண்டு உலகமே வியக்கும் வகையில் இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் உருவபொம்மைகள்!

அப்போது, குடியரசுத் தலைவர் உள்பட கோடான கோடி மக்கள் அத்திவரதரை வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். ஆனால், இப்போது அத்திவரதர் வைபவம் நடைபெற்றதற்கான எந்தத் தடயமும் இல்லாமல் உள்ளது.

உலகப் புகழ்பெற்ற இந்த வைபவம் நடந்த இக்கோயிலில் அத்திவரதர் உருவபொம்மையை எவ்விடத்தில் வைப்பது குறித்து கோயிலில் ஆய்வுமேற்கொண்டேன். அத்திவரதர் வைபவம் நடைபெற்ற வசந்த மண்டபத்திலேயே அத்திவரதர் நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் 10 அடி உயர உருவபொம்மை வைக்கப்படும்.

கூழுக்கு தானியம் வேண்டும்

மேலும், ஆன்மிக மாதமான ஆடி மாத வெள்ளிக்கிழமையன்று, அம்மன் கோயில்களில் நடைபெறும் அம்மன் கூழ்வார்த்தல் நிகழ்விற்கும், இந்து சமய அறநிலையத் துறை தானியங்களை வழங்கிட வேண்டும்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள பல முக்கியக் கோயில்களில் பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித சுவாமி வெளிப் புறப்பாடுகளும் நடைபெறவில்லை.

தற்போது கரோனா முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்து சமய அறநிலையத் துறை சுவாமி புறப்பாடு நடத்தவதற்கான உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலையை வாழ்த்தி கரூரில் வைக்கப்பட்ட பேனர் சேதம்: கொந்தளிக்கும் பாஜகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.