காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியில் வசிப்பவர் விஜயகுமார் (30). இவர் செங்கல்பட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கோழிப்பண்ணை 2வது தெருவில் வசித்து வந்த இலியாஸ் என்ற இளைஞர் அடிக்கடி புதிய இருசக்கர வாகனங்களுடன் வலம் வந்து கொண்டிருந்திருக்கிறார். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் கஞ்சா வியாபாரம் செய்வது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, இந்த பகுதியில் கஞ்சா விற்க கூடாது எனவும், இளைஞர்களை வைத்து இப்பகுதியில் சத்தம் போடக்கூடாது எனவும் விஜயகுமார் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் காவல்துறைக்கு விஜயகுமார் அடிக்கடி தகவல் சொல்வதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து நேற்று இரவு இலியாஸ் என்பவர் பேசுவதாக அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டினுள் வைத்து விஜயகுமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயங்களுடன் விஜயகுமார் பயங்கர அலறல் சத்தத்துடன் வீட்டிலிருந்து ரத்தவெள்ளத்தில் வெளியேறினார்.
அதன் பிறகு அருகிலிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் 65 தையல்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார், விஜயகுமார். மேலும் இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இலியாஸ் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
செங்கல்பட்டில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!