ETV Bharat / state

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் துணிப்பையில் கிடந்த குழந்தை! - orphaned child at Chengalpattu

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பிறந்து ஏழு நாள்களே ஆன குழந்தையை துணிப்பையில் வைத்து யாரோ போட்டுவிட்டு சென்றுள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

துணிப்பையில் கிடந்த குழந்தை!
author img

By

Published : Oct 31, 2019, 4:11 PM IST

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சென்னை கடற்கரைவரை செல்லும் மின்சார ரயிலில் பிறந்து ஏழு நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை துணிப்பையில் வைத்து யாரோ போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தையை அனாதையாக போட்டுவிட்டு போனவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் ரயில்வே காவல் துறையினர் அக்குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது குழந்தை சிகிச்சை பெற்றுவருகிறது.

அந்தக் குழந்தை பிறந்து ஏழு நாள்கள் மட்டுமே ஆகியுள்ளது குறிப்பிடத்கக்கது. தொடர்ந்து இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

சுஜித்தின் மீட்புப் பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவு - ஆட்சியர் அறிக்கை

Intro:செங்கல்பட்டில் ரயில் பெட்டியில் ஏழேநாட்களான பச்சிளங்கூழந்தை கண்டெடுப்பு

.Body:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை முதலாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த சென்னை கடற்கரை வரை செல்லவேண்டிய நின்று கொண்டிருந்த (லோக்கல்)மின்சார ரயிலில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டியாக உள்ள மகளிருக்கான் இரயில் பெட்டியில் பிறந்து ஏழு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ஒரு துணிபையில் வைத்து யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இதை அங்கு பணியில் இருந்த இருப்புபாதை தலைமைக் காவலர் தனசேகர் என்பவர் ரயில்பெட்டியை ஆய்வு செய்த போது ஒரு பை கிடப்பதை பார்த்து அந்த பையையும் பிரித்து பார்த்துள்ளார். பையில் ஒருகுழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். செங்கல்பட்டு ரயில்வே காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து அதன்பின் இரயில்வே போலீகார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர் தற்போது குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. Conclusion:குழந்தையை யாரேனும் கடத்திவந்து தப்பிக்க வழி தெரியாமல் அச்சத்தில் தூக்கிவீசிவிட்டு சென்றனரா? அல்லது பெற்ற தாயே குழந்தையை போட்டு விட்டு சென்றனவா? என செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.