ETV Bharat / state

’பணத்தால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்’ - டிடிவி தினகரன் சாடல் - டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம்

தமிழ்நாடு மாநிலம் இன்றைக்கு ஏழு லட்சம் கோடிக்கு மேல் கடனில் இருக்கும் நிலையில் அதனை அடைக்கத் தள்ளாடி வருகிறோம். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் போடுவோம் என ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறார்கள் என, ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது டிடிவி தினகரன் பேசினார்.

ttv dinakran speech
டிடிவி தினகரன் பேச்சு
author img

By

Published : Mar 19, 2021, 10:30 AM IST

Updated : Mar 19, 2021, 10:36 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ மொளச்சூர் ரா.பெருமாளை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

பணத்தை கொடுத்து வாக்குகளைப் பெற நினைக்கிறார்கள்

நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால் துரோகக் கட்சியான ஆளுங்கட்சி, பண மூட்டைகளை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்து பொதுமக்களின் பணத்தை என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவற்றைக் கொடுத்து எப்படியாவது வாக்குகளைப் பெற்று விடலாம் என நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களாகிய நாம் எல்லாம் ஏமாளிகள், ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு வாக்கு அளித்துவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்று தெரியும். நிச்சயம் அவர்கள் தோல்வியைத் தழுவி விடுவார்கள்.

அதுபோல 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஏக்கத்தில் பகல்கனவு கண்டுகொண்டிருக்கிறது திமுக கூட்டணி. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும், தமிழ்நாட்டு செல்வத்தையெல்லாம் சுரண்டி விட வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

அம்மா ஆட்சியை எதிர்நோக்கும் மக்கள்!

உண்மையான அம்மாவின் ஆட்சி, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நல்லாட்சி அமைய வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற ஆட்சி என்றைக்கும் இருக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து சமுதாய மக்களும் சமநீதி பெற்று வாழவேண்டும் என்பதுதான் ஒரு ஆட்சியின் கருத்தாக இருக்கவேண்டும். சிறந்த நல்லாட்சி, வெளிப்படையான, ஊழலற்ற, லஞ்ச லாவண்யம் அற்ற, வளர்ச்சியை நோக்கிய ஆட்சி அமைய வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை

கடனை அடைக்கத் தள்ளாடுகிறோம்!

தமிழ்நாடு மாநிலம் இன்றைக்கு ஏழு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கி இருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சி குடும்பத்தலைவிகளை ஏமாற்றுகிற வகையில் ’ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் ஆயிரத்து 500 ரூபாய் பணம் போடுகிறேன்’ என்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சியினரும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஏற்கனவே உள்ள கடனை எப்படிக் கட்டுவது என்று எல்லோரும் தள்ளாடிக் கொண்டிருக்கிறோம். முதியோர் உதவித் தொகையை ஏன் இவர்களால் ஒழுங்காக கொடுக்க முடியவில்லை?

”கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்” என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல நம்ம எல்லாம் ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் இதில் ஏமாந்து விடக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்

Last Updated : Mar 19, 2021, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.