காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்புலிவனம், கடல்மங்கலம், மருதம், பாலேஸ்வரம், வாடாதவூர், குண்ணவாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால், தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர்ந்திட, இரட்டை இலை சின்னத்தில் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
கிராமப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோமசுந்தரத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதிமுக கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திளக்குமார், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் உள்ளிட்டோர் இந்தப் பரப்புரையின்போது உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : ‘ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமிக்கு பிஆர்ஓவாக உள்ளார்’ - ஸ்டாலின் தாக்கு