ETV Bharat / state

ஸ்டாலினை கண்டித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக - திமுக நிர்வாகிகள் கொந்தளிப்பு - தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி குறித்து இழிவாக பேசிய திமுக தலைமையை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரை திமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

admk_poster
admk_poster
author img

By

Published : Jan 12, 2021, 5:05 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பெண்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தரக்குறைவாக பேசி வருவதை கண்டித்து காஞ்சிபுரத்தில் மாவட்ட கழகம் அனைத்து பெண்கள் அமைப்பு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இது பற்றி அறிந்த திமுக நிர்வாகிகள், நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். ஆனால், அதிமுகவினர் அதே இடத்தில் மீண்டும் திமுகவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டினர். இதனால் காஞ்சிபுரத்தில் திமுக - அதிமுக இடையே சலசலப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.