காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் காஞ்சிபுர மாவட்டம் அதிமுக சார்பில் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் குறித்து அவதூறாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பெண்களை இழிவாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் பேசுவதாக அவர்களைக் கண்டித்து, மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே. பழனி ஆகியோரது தலைமையில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சிறப்பு அமைப்பாளராக கலந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோரை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
பின்னர் அவர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான அதிமுகவினர் தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இறந்துபோன பெண்ணின் பெயரை பயன்படுத்தி பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2500 பணம் மோசடி