ETV Bharat / state

'சிவசங்கர் பாபா மீதான ஆதாரங்கள் பொய்யானவை' - நடிகர் சண்முகராஜ் - Actor Shanmugaraj byte

சிவசங்கர் பாபா மீதான குற்றசாட்டுகள், ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை வெளியிடுவோம் என்று நடிகர் சண்முகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சண்முகராஜ் பேட்டி
நடிகர் சண்முகராஜ் பேட்டி
author img

By

Published : Jun 15, 2021, 2:39 PM IST

காஞ்சிபுரம்: சிவசங்கர் பாபாவின் பக்தரான நடிகர் சண்முகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "
சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் போடப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 176 வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்பியுள்ளனர். முன்னாள் மானவர்கள் அமிர்தாபாலாஜி, ஆசிப் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பள்ளியில் இருந்து வெளியேற்றபட்டதால் பழி சுமத்தியுள்ளனர்.

நடிகர் சண்முகராஜ் பேட்டி

காவல் துறையினர் ஒரு தரப்பில் மட்டும் விசாரிக்காமல் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவசங்கர் பாபா மீதான குற்றசாட்டுகள், ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க சிபிசிஐடி காவல் துறையினர், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க உள்ளனர். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவொன்று அவரிடம் விசாரணை மேற்கொள்ள டேராடூன் விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.