ETV Bharat / state

Chandramukhi 2: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்! - Kanchi

chandramukhi 2: விரைவில் திரைக்கு வர உள்ள சந்திரமுகி 2 பாகம் மற்றும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் படங்கள் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Actor Raghava Lawrence
நடிகர் ராகவா லாரன்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 12:06 PM IST

திரைக்கு வரப்போகும் புதிய படங்கள் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பூஜை

காஞ்சிபுரம்: தமிழ் திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளவர் நடிகர் ராகவா லாரன்ஸ். முதலில் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமானவர், அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில், குறிப்பாக குழந்தைகள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். காஞ்சனா போன்ற காமெடி கலந்த பேய் படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டார் ராகவா லாரன்ஸ்.

நடனம், நடிப்பு ஆகியவற்றோடு நில்லாமல் இயக்குநராகவும் திரைத்துறையில் வலம் வருகிறார். இந்நிலையில் அடுத்த மாதம் வரவுள்ள விநாயகர் சதுர்த்தி அன்று இவரது சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவர இருக்கிறது. எனவே, அந்த படம் வெற்றி பெற வேண்டி ராகவா லாரன்ஸ், காஞ்சி சங்கர மடத்திற்குச் சென்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

அதன் பின்னர் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். ராகவா லாரன்ஸ் கோயிலுக்கு வந்ததை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர், அவருடன் செல்பி எடுக்க ஆர்வமுடன் கூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்த ராகவா லாரன்ஸ்காக சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு செய்தவுடன், கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் கூறும்போது, "சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2 திரைப்படங்கள் முடிவடைந்துள்ளன. இந்த திரைப்படங்கள் வெற்றி பெற சாமி தரிசனம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு முக்கிய முடிவை நேற்று எடுத்திருந்தேன். என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி அளிக்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு இருந்தேன். இதை கடந்த 6 மாதங்களாகவே நான் இதை தெரிவித்து வருகிறேன்.

எந்த ஒரு நல்ல முடிவை எடுத்தாலும் கடவுளின் சன்னதியில் அதை அறிவித்து வழிபாடு செய்வது வழக்கம். அதன் அடிப்படையில், காஞ்சி காமாட்சி அம்மனையும், பெரியவாவையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டேன்" எனக் கூறினார். முன்னதாக காஞ்சி காமகோடி மடத்திற்குச் சென்ற ராகவா லாரன்ஸ் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

இதையும் படிங்க: Jawan audio launch: "ஜவான் இந்தி படமல்ல... இந்திய படம்" - அனிருத் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.