புரெவி புயலால் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏரிகள் மாவட்டம் என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 718 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 280 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 438 ஏரிகள் என 718 ஏரிகள் 100% முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 66 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 ஏரிகள் 75% கொள்ளளவையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளன.
காஞ்சி-செங்கை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முழுக் கொள்ளளவை எட்டிய 718 ஏரிகள்! காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் 18 அடி ஆழத்தில் 1 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். ஏரியின் முழுக் கொள்ளளவான 18 அடியும் தற்போது நிரம்பி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறுகிறது.மேலும் அம்மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான 18.60 அடி ஆழம்கொண்ட தாமல் ஏரி 14.50 அடி, உத்திரமேரூர் 20அடி கொள்ளளவு கொண்ட பெரிய ஏரியில் 9.50 அடி, 13.20 அடி கொள்ளளவு கொண்ட பிள்ளைபாக்கம் ஏரி 12.90 அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. 17.60 அடி ஆழம் கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறுகிறது. 18.40 அடி கொள்ளளவு கொண்ட மணிமங்கலம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது எனப் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
இதையும படிங்க: கேரள மாநில பாஜகவின் பரப்புரை வாகனம் மீது திமுகவினர் தாக்குதல்!