காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் அருகே உள்ள சித்தேரி மேடு பகுதியில் வசிப்பவர் துரையரசன் 38. ரயில்வே துறையில் கேட் கீப்பராக பணிப்புரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல் நேற்று (ஏப்.13) பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் உணவு அருந்திவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு மனைவி மற்றும் மகனுடன் தூங்கியுள்ளார்.
பின்னர் இன்று காலை துரையரசன் வழக்கம் போல் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நெக்லஸ், ஆரம், செயின், கம்மல், வெள்ளி என சுமார் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் கொள்ளைச் சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்தப் பகுதியில் சுற்றிலும் நெருக்கமான குடியிருப்புகள் உள்ளது. இருப்பினும் மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் எண்ணிக்கை குறைவால் அரசுப் பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்!