காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 28 நாட்களாக விமரிசையாக நடைபெற்றுவருகிறது.
இதுவரை ஏறத்குறைய 40 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்திருக்கிறார்கள். 29ஆம் நாளான இன்று அத்திவரதர் ஆரஞ்சு நிற பட்டாடை உடுத்தி வண்ண வண்ண மலர்களால், பூமாலை, செண்பகப் பூ மாலை உள்ளிட்டவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.