ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22.47 செ.மீட்டர் மழைப்பதிவு! - Burevi storm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்துவரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தமாக 22.47 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

rainfall
rainfall
author img

By

Published : Dec 4, 2020, 11:45 AM IST

புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் (டிச. 02) இரவுமுதல் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துவருகின்றது.

குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.

இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகின்றது.

ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் இதுவரை 564 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று (டிச. 04) காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 4.16 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 3.34 செ.மீ., உத்திரமேரூரில் 7.3 செ.மீ., வாலாஜாபாத்தில் 2.26 செ.மீ., குன்றத்தூரில் 2.75 செ.மீ .என மாவட்டத்தில் மொத்தமாக 22.47 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மினி லாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.