உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்திரிஷ் என்பவர், சென்னை திருவேற்காட்டிலிருந்து கார்களுக்கு உபயோகப்படும் 10 டன் எடை கொண்ட ராட்சத உதிரிப்பாகங்களைக் கனரக லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
லாரி தண்டலம் பகுதியை வந்தடைந்த போது, அதிலிருந்த 10 டன் எடை கொண்ட ராட்சத உதிரிப்பாகம் ரோப் அறுந்ததில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நேரிடும்போது பின்னால் எவ்வித வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினர், கிரேன் உதவியோடு உதிரிப் பாகத்தை அகற்றி போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர்.
மேலும், கனரக வாகனங்களில் அதிக எடை கொண்ட பாகங்கள் ஏற்றிச்செல்கையில், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும் எனக் காவல் துறையினர் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: சென்னையில் 220 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற இரண்டு பேர் கைது!