ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: வங்கியில் பணம் செலுத்த சென்றவரின் காரிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft
author img

By

Published : Nov 1, 2019, 11:00 AM IST

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது மகனின் படிப்புச் செலவிற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு அய்யம்பேட்டையில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக காரில் வந்துள்ளார்.

அய்யம்பேட்டையில் உள்ள வங்கியில் 2 லட்சத்தை செலுத்தி விட்டு மீதி ஒரு லட்ச ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தனது காரின் பின்பக்க டயர் பஞ்சராகி இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட இளையராஜா, தனது கையில் வைத்திருந்த பணத்தை காருக்குள் வைத்துள்ளார். இதனையடுத்து காரின் டயரை மாற்ற கார் டிரைவரிடம் கூறிவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக அருகில் மறைவிடத்திற்குச் சென்றுள்ளார்.

திரும்பி வந்து காரின் கதவைத் திறந்தபோது காரில் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து உடனடியாக இளையராஜா வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:

காஞ்சிபுரம் அருகே வங்கியில் பணம் செலுத்த சென்றவரின் காரிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் பணம் கொள்ளை.

மர்ம நபர்கள் கைவரிசை.

வாலாஜாபாத் போலீசார் விசாரணை.
-----------------------------------------------

Body:காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய் பணத்தை கடனாகப் பெற்றுக் கொண்டு அதனை அய்யம்பேட்டையில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக தனது காரில் வந்துள்ளார்.

அய்யம்பேட்டையில் உள்ள வங்கியில் கடனாகப் பெற்று வந்த ரூபாய் 2 லட்சத்தை செலுத்தி விட்டு மீதி ஒரு லட்ச ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது தனது காரின் பின்பக்க டயர் பஞ்சர் ஆகி இருப்பதை கண்டு திடுக்கிட்டு பணத்தை தனது கார் டிரைவரிடம் கொடுத்து காருக்குள் வைத்துவிட்டு காரின் டயரை மாற்ற சொல்லியுள்ளார். அதற்குள் சிறுநீரைக் கழிப்தற்காக அருகில் உள்ள மறைவிடத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து காரின் கதவை திறந்தபோது காரில் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக இளையராஜா வாலாஜாபாத் போலீசில் புகார் தெரிவித்தார்.

Conclusion:புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு காரிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.