கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சியிலுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிக விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் காவல் துறையை தொடர்பு கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.