கள்ளக்குறிச்சி: 17 வயது சிறுமியை சுரேஷ் பாபு (27) என்பவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியை இளைஞர் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில், கருவுற்ற சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பணியாக உள்ளார். முன்னதாக சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் சுரேஷ் பாபுவை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சமோசாவில் பல்லி...தெரியாமல் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதி