ETV Bharat / state

குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது - kallakurichi news

கள்ளக்குறிச்சி: சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு இளைஞர்களை குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது
குண்டர் சட்டத்தில் இளைஞர்கள் கைது
author img

By

Published : May 21, 2020, 1:56 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் டேவிட் ராஜ்(27), அதே ஊரைச் சேர்ந்த சாமுவேல் மகன் மெல்கீயூர் (27), ஆகிய இருவரும் தொடர்ந்து சட்ட விரோதமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அடிதடி, கொலை மிரட்டல், மணல் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் பேரில் இன்று(மே 21) உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி அந்த குற்றவாளிகளை கைது செய்தார். பின்னர் இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான வேலைகளை தற்போது மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த ஊருக்குச் செல்லும் வெளிமாநிலத்தவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.