கள்ளக்குறிச்சி: கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களை வழங்க பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆசனூர் ரோட்டரி குழுமம், ஆசனூர் மக்கள் நலச்சங்கம் போன்ற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஊர் பொதுமக்களும் எண்ணினர்.
அதன்பேரில் பொதுமக்களுடன் ஒன்றுசேர்ந்து பல்வேறு உதவும் அமைப்புகள் மின்விசிறி, வாளி, துடைப்பம், குப்பைத் தொட்டி, சாக்பீஸ், அழிப்பான் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை சீர்வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து, பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவர்கள் மத்தியிலும் இப்பொருள்களை வழங்கினர்.
சீர்வரிசை பொருள்களை வழங்கிய அமைப்புகளுக்கு பள்ளி மாணவர்களும் உற்சாகமாக கைதட்டி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கிராமப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார்- காவேரி மருத்துவமனை அறிக்கை