கள்ளக்குறிச்சி: தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் 300 ரூபாய் மதிப்பிலான இலவச மளிகைப் பொருள்கள், புடவை, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கும் விழா, விஜய் மக்கள் இயக்க ஒன்றிய கௌரவத் தலைவர் புருஷோத்தமன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதனை மாவட்டத் தலைவர் பரணிபாலாஜி, நலிவடைந்த கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரியாஸ், மணிகண்டன், சூர்யா, கிரிதாஸ், முருகேஷ், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ’நாளைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ - விஜய் மக்கள் இயக்கம்