நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்படியான போஸ்டர்களை அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டிவருகின்றனர்.
அந்தவகையில், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் 'மக்களின் நலன் கருதி வர சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு கை பார்த்திடலாமா?' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க...நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் - கங்கனாவின் வைரல் வீடியோ