கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தொடர்ந்து பின்னால் கம்பி ஏற்றி கொண்டு மற்றொரு லாரி சென்றது. இந்த லாரியை மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த விஜயன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்பாரத விதமாக கம்பி லோடு ஏற்றி சென்ற லாரி, சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் விஜயன் இடிபாடுகளில் சிக்கினார். இதயைடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், 3 மணி நேர போராட்டத்திற்கு பின் விஜயனை சடலமாக மீட்டனர்.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.