திண்டுக்கல்லிருந்து சென்னைக்கு திராட்சை லோடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரியின் முன் சக்கர டயரானது திடீரென கழண்டதால், லாரியானது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் திராட்சை லோடு ஏற்றி வந்த லாரியானது தலைக் குப்பற சாலையில் கவிழ்ந்து கிடந்தது. இதனால் சாலையில் கிடந்த திராட்சை பெட்டிகளை பொதுமக்கள் முண்டியடித்து தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகன விபத்து- சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிப்பு!