கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மண்ணாடிப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (40), இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து விட்ட நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்வீட்ஸ் ஸ்டால் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை செய்யும் கடைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று (அக்.28) பழனிசாமி தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தற்போது இந்த வழக்கில் பழனிசாமி உடன் ஸ்வீட் கடையில் பணிபுரியும் அவரது பெரியப்பா மகனான வேலு என்பவரை பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:2 பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை... குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு