கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்குள்பட்ட கச்சிராயப்பாளையம் சாலை, சங்கராபுரம் சாலை என முக்கியச் சாலைகளின் ஓரங்களில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள், நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் கிடக்கின்றன.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, அப்பகுதி குடியிருப்புவாசிகள், அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வைரஸ் தொற்றினால் நோய் பரவ வாய்ப்புள்ளதாகப் பொதுமக்களும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:நகரில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு