கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த 13ஆம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் எனத்தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரைக் கொண்டு மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் நாளை (ஜூலை 18) விசாரணைக்கு வர உள்ளது. அப்போது காவல் துறை சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்