கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேவுள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜா (27). இவருக்கும் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த புஷ்பலதா (22) என்பவருக்கும், கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த புஷ்பலதா, இன்று (செப்.05) மதியம் தனது வயலில் இருந்த மிளகாய் தோட்டத்தில், மிளகாய் பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கிணற்றின் ஓரமாக இருந்த மிளகாயை பறிக்கச் சென்ற போது, எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். பின்னர் புஷ்பலதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், அவற்றை மீட்பதற்காக முயன்றுள்ளனர். இருப்பினும், புஷ்பலதா மீட்பதற்கு முன்பாகவே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கல்லீரல் பிரச்னையால் காவலர் தூக்கிட்டு தற்கொலை!