ETV Bharat / state

பட்டியலின அருட்சகோதரி இறப்பில் சந்தேகம் - உண்மை அறியும் குழு அரசுக்கு கோரிக்கை! - பட்டியலின மாணவி கொலையா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரிலுள்ள அருட்சகோதரிகளால் நடத்தப்படும் கல்லூரியில், பட்டியலின அருட்சகோதரி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உண்மை அறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை வெளியிட்ட உண்மை அறியும் குழு
அறிக்கை வெளியிட்ட உண்மை அறியும் குழு
author img

By

Published : Apr 13, 2022, 8:59 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூரில் உள்ள அருள் சகோதரிகளால் நடத்தப்படும் துறவற கன்னியர் சபையில் சேர்ந்து கௌசல்யா ராஜேந்திரன் (25) என்ற மாணவி இளங்கலை கணிதவியலில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், பிப்ரவரி 16ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்ததாக கல்லூரி நிவாகத்தினர், காவல் துறைக்கு தகவலின் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மீட்புக் குழுவினர் மாணவியின் உடலை மறுநாள் பிப்.17ஆம் தேதி சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று (ஏப்.13) பத்திரிகையாளர்களை சந்தித்த, உண்மை அறியும் குழுவினர் கௌசல்யாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவர்களது விசாரணையில் மாணவி தற்கொலை செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும் மாணவியின் நண்பர்களிடம் கேட்கும்போது கல்லூரியின் தலைமை அருள்சகோதரி புனிதா, கௌசல்யாவை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், ‘தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்து நீயெல்லாம் கன்னியாஸ்திரி ஆக நினைக்கலாமா’ என பலமுறை அந்த மாணவியிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

கௌசல்யா, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அருட்சகோதரியாக பட்டம் பெற்றுள்ளார். பின்னரே கல்லூரிப் படிப்பில் சேர்ந்துள்ளார். படிப்பில் ஆர்வம் உள்ளவர் என உடன் பயில்வோர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல் துறையினர், வழக்கை விரைந்து முடித்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. ’இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்’ என்று உண்மை அறியும் குழுவினர் கோரிக்கை தெரிவித்தனர்.

அறிக்கை வெளியிட்ட உண்மை அறியும் குழு

மேலும் இது குறித்து கௌசல்யாவின் தந்தை ராஜேந்திரன் கூறுகையில், “என் மகள் நன்றாக படிப்பாள், பலமுறை கல்லூரியில் சாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்துவதாக என்னிடம் கூறினாள். என் மகளின் மரணத்திற்கு காரணமான தலைமை அருட்சகோதரிகள் புனிதா, அமலி ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பிரபல ரவுடியான தன்பாலின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை - மூவர் கைது; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.