கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018 ஆம் ஆண்டு படித்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து, வட்டாட்சியர் அலுவலத்திற்கு பேரணியாகச் சென்று வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், தேர்தல் முடிந்தவுடன் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...திமுக நேர்காணல் தேதி அறிவிப்பு