ETV Bharat / state

Kallakurichi Student Death issue: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - தற்கொலை வழக்கு

கள்ளக்குறிச்சி அருகே காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

students death in kallakurichi  kallakurichi lovers suicide  kallakurichi suicide issue  kallakurichi stusent suicide issue  student relatives strike on the issue of students death  student relatives strike  suicide case  murder case  கள்ளக்குறிச்சி மாணவர்கள் மரணம்  கள்ளக்குறிச்சி மாணவைகளின் மரணத்தில் சந்தேகம்  மாணவரின் உறவினர்கள் சாலை மறியல்  சாலை மறியல்  சந்தேக மரணம்  கள்ளக்குறிச்சி மாணவர்கள் சந்தேக மரணம்  தற்கொலை வழக்கு  கொலை வழக்கு
மரணம்
author img

By

Published : Nov 24, 2021, 7:05 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், சிறுமி இருவர், அரசு பள்ளியில் ஒன்றாக 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என சிறுமி தரப்பினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை தேடிவந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவர்கள்

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கோமுகி ஆறு அருகே தூக்கில் தொங்கிய நிலையில், இரு உடல்கள் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறுவனின் உறவினர்கள்

இதனையடுத்து அங்கு விரைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையிலான காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் இன்று (நவ.24) சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உறவினர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.