ETV Bharat / state

மகன் கொலை செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் புகார் - வைரலாகும் காணொலி! - தமிழ் குற்றச் செய்திகள்

கள்ளக்குறிச்சி: மகன் தங்களை கொலைசெய்ய முயற்சிப்பதாகவும், இது குறித்து புகாரளித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பெற்றோர் வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

son-tries-to-kill-his-parents-viral-video

author img

By

Published : Sep 30, 2020, 12:00 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகேயுள்ள மண்மலை கிராமத்தில் வசித்துவருபவர் ராமசாமி (75) .இவரை ஏமாற்றி இவரது மகன் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகவும் இவர்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ராமசாமி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மகன் கொலை செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் புகார்

இதையடுத்து அவர் தனது சூழ்நிலையை காணொலியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இந்தக் காணொலியை பார்த்த பிறகாவது காவல் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க:கோவையில் சிறுமி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.